பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

Three Simple Strategies to follow – Day Traders

 

பங்குச்சந்தையில் மூன்று விதமான நபர்கள் அமைய பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். தின வர்த்தகர்கள்(Day Traders), குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள்(Investor) என காலங்களுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பவர்கள் உள்ளனர். தினசரி வர்த்தகர்களை பொறுத்தவரை அவர்கள் வர்த்தகம் செய்யும் காலம் சில மணிகளிலிருந்து அன்றைய நாள் முழுவதுமாக இருக்கும்.

 

தின வர்த்தகர்கள் அனைவரும் தங்களின் நேர மேலாண்மை(Time Management) மற்றும் பங்குகளின் மீதான சரியான அணுகுமுறையை(Trend) கொண்டிருக்க வேண்டும். இதனை வர்த்தக ஒழுக்கம்(Trading Discipline) என்றும் குறிப்பிடலாம். பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொரு தின வர்த்தகர்களுக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள் இருக்கலாம். அந்த கொள்கைகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடவும் செய்யலாம்.

 

பங்குச்சந்தை தின வர்த்தகத்தில் நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என எண்ணப்பட்டாலும், உண்மை என்னவோ இழப்பு அல்லது ஆபத்திற்கான வாய்ப்பு தான் அதிகம் எனலாம். அதனால் தான் தினசரி வர்த்தகம்(Intra Day) மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் லாபங்களை பதிவு செய்வதை விட, நஷ்டத்தினை முடிந்த அளவு தவிர்த்தாலே வெற்றியடையலாம்.

( Read this post after the advertisement… )

 பங்குச்சந்தை என்பது ரிஸ்க் அதிகம் நிறைந்த ஒரு வாய்ப்பு சந்தை ஆகும். அதனால் நமது மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் சில அடிப்படை விஷயங்களை கற்று கொண்டு, அதற்கான வியூகம்(Strategy) அமைப்பதே சிறந்தது. திட்டமிடப்பட்ட வியூகத்தை நாம் தவறாமல் எப்போதும் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். அது போன்ற வியூகங்களை கையாள இங்கு சில எளிமையான உத்திகளை கொடுத்துள்ளோம்.

 

பங்குச்சந்தையில் நாம் தின வர்த்தகம் மேற்கொள்ளும் நாள் அன்று, உலகளாவிய சந்தை புள்ளிவிவரங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார செய்திகளை தெரிந்து வைத்திருப்பது நன்று. நாம் வர்த்தகம் செய்யும் நாளன்று பங்குச்சந்தை காளையாக உள்ளதா அல்லது கரடியாக உள்ளதா, இல்லையெனில் பக்கவாட்டில் நகர்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Best Intra Day Strategies

சந்தை இன்று நேர்மறையாக அல்லது ஏற்றமாக(Bullish) தொடங்குகிறது எனில், விலை ஆதரவு(Support level) உள்ள நிலையில் பங்குகளை கண்டறியுங்கள். பின்பு, அதன் விலை ஆதரவு நிலையில் உள்ள போது பங்குகளை வாங்க தயாராகுங்கள். அப்படியில்லாமல் இருப்பதற்கான நிலை தெரிந்தால் அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை முடிந்தவரை தவிருங்கள்.

 

சந்தை கரடியின் பிடியில் அல்லது இறக்கத்தில்(Bearish) அமைந்தால், அதிகபட்ச விலையில்(Resistance level) உள்ள நிலையை அல்லது பங்குகளை கண்டறியுங்கள். பின்பு அதே விலையில் பங்குகளை முதலில் விற்க(Short – Selling) தொடங்குங்கள். பங்குகள் அதிகபட்ச விலையில் கிடைக்கவில்லை எனில், அதன் நிலை வரும் வரை காத்திருக்கவும் அல்லது அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை தவிர்க்கலாம்.

 

நீங்கள் வர்த்தகம் செய்யும் நாளில், பங்குச்சந்தை பக்கவாட்டில்(Sideways) நகர்கிறது என்றால், பிரேக் அவுட் (Breakout) உத்தியை பயன்படுத்துங்கள். பிரேக் அவுட் ஆன பிறகு வர்த்தகம் செய்வதை தொடங்குங்கள். இவை மூன்றும் ஒவ்வொரு தின வர்த்தகரும்(Day Trading) பின்பற்றக்கூடிய எளிய உத்திகள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உங்களை நீங்களே ஒழுங்குபடுத்தி கொண்டு வர்த்தகம் செய்கையில், அதற்கான பலன் கிடைக்கும்.

 

( இந்த பதிவிற்கான ஆங்கில பதிவை பார்க்க: Simple Strategies for the Day Trading )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.