ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

Reliance Jio’s 4th Quarter Profit of Rs. 510 Crores

 

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டிருக்குகிறது. ஜியோ தனது ஆரம்ப நிலையில் நஷ்டத்தை சந்தித்தாலும் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அளித்த சேவை (Rs. 49/- Pack Offer) மூலம் கடந்த இரு காலாண்டுகளில் லாபத்தை நோக்கி சென்றுள்ளது.

 

கடந்த நான்காவது காலாண்டில் (FY 2017-18 – 4th Quarter) ஜியோ நிறுவனம் வருவாயாக 7128 கோடி ரூபாயை எட்டியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 510 கோடி இருந்துள்ளது. இது இதற்கு முன்னர் இருந்த காலாண்டை காட்டிலும் 1.2 சதவீத லாப வளர்ச்சியாகும். ஏர்டெல் நிறுவனம் கடந்த காலாண்டில் பெற்ற வளர்ச்சியை விட, ஜியோவின் இந்த லாப வளர்ச்சி அதிகமாகும்.

 

ஜியோவின் வரி மற்றும் வட்டிக்கு முந்தைய (EBITDA) வருமானமாக ரூ. 2694 கோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மூன்றாவது காலாண்டை விட 2.5 சதவீத வளர்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மார்ஜின் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது.

( Read this post after the advertisement… )

  

நான்காவது காலாண்டில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 2.65 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த காலத்தில் அதன் வாடிக்கையாளர்கள் 2.15 கோடியாக இருந்தனர். மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாகும்.

 

ரிலையன்ஸ் ஜியோ கடந்த காலாண்டில் லாபமீட்டினாலும் அதன் ARPU (Average Revenue Per User) என்று சொல்லப்படும் ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் 11 % குறைந்துள்ளது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் ரூ. 137 /- ஆக உள்ளது. இருப்பினும் இந்த பயனாளருக்கான வருவாய் ஏர்டெல் நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் ரூ. 116/- ஆக நிலை கொண்டுள்ளது.

 

ஜியோவின் தரவு போக்குவரத்து (Data Traffic) 4940 கோடி ஜி. பி.(4940 Crore GB) ஆகவும், ஒரு பயனாளரின் தரவு பயன்பாடு சராசரியாக 9700 MB ஆகவும் உள்ளது. குரல் அழைப்பு (Voice Calls) பயன்பாடு வாடிக்கையாளர்  ஒருவருக்கு அதிகபட்சமாக 716 நிமிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே ஏர்டெல் பயனாளிகளுக்கு 670 நிமிட அழைப்புகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.