செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

Reliance Jio acquired the Artificial Intelligence Company Haptik for Rs. 700 Crore

 

மும்பை மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஹாப்டிக்(Haptik). கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடல்(Artificial Intelligence) தளங்களை வடிவமைத்து வருகிறது. இரு நிறுவனர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களும், மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டியலையும் கொண்டுள்ளது.
அமேசான் பே, ஓலா, கோகோ கோலா, ஜோமாடோ, கோ பிபோ(Goibibo), மஹிந்திரா, ஒயோ(Oyo) மற்றும் எச்.டி.எப்.சி. லைப் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து அதற்கான உரையாடல் தளங்களை வழங்கி வருகிறது. டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் ஹாப்டிக் நிறுவனத்தில் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனம் ஐ.பி.எல். மற்றும் ட்ரீம் 11(Dream 11) ஆகிய பிராண்டுகளுக்கும் தனது சேவையை(Conversational AI Platform) அளித்து வருகிறது. இதன் உரையாடல் தளம் நினைவூட்டல் செய்தி, விமானம் அல்லது வாகன பயணத்தை பதிவு செய்வது, கைபேசி ரீசார்ஜ் மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்துவதில்  பயனாளருக்கு துணைபுரியும்.

 

ஹாப்டிக் நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கும்  முயற்சியை ஏற்கனவே கையாண்டது. தற்போது இவற்றில் ஜியோ வெற்றி கண்டு செயற்கை நுண்ணறிவு தளத்தை கொண்டுள்ள ஹாப்டிக் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோ முதலீடு செய்ய உள்ள தொகை ரூ. 700 கோடி எனவும், முதற்கட்ட முதலீடாக 230 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ தரப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 87 சதவீதமாகவும், மற்ற பங்குகள் அதன் நிறுவனர்களிடம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது மற்றும் உலகளவில் ஒன்பதாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜனவரி மாத முடிவின் படி, ரிலையன்ஸ் ஜியோவுக்கு 28.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.