144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Only 19 Crores in combined 144 Bank accounts – Reliance Communication’s Tragedy

 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (Reliance Communication -Rcom) நிறுவனம் கடன் பிரச்னையால் கடந்த வருடம் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அதன் மொபைல் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு மாறினர்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சொல்லப்பட்ட கடன் மட்டும் ரூ. 46,000 கோடியாகும். தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் நிறுத்தப்பட்ட சேவைகள் முகேஷ் அம்பானியின் ஜியோவில் (Reliance Jio) மாற்றம் பெற்று வருகின்றன. கடன் பிரச்சினையை தொடர்ந்து முதலீடு செய்த நிறுவனங்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள்  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீது அடுத்தடுத்து வழக்குகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

 

பாஸ்டன் நகரத்தை சேர்ந்த அமெரிக்க டவர் நிறுவனம் (American Tower Corp), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து வசூலிப்பதற்கான ரூ. 230 கோடி தொகைக்காக வழக்கு தொடுத்துள்ளது. அதே போன்று, எரிக்சன் (Ericsson) நிறுவனமும் ரூ. 550 கோடி தொகையை பெற வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இது சம்மந்தமாக அனில் அம்பானி நிறுவனம் தனது ஸ்பெக்ட்ரம் சேவையை ஜியோவிற்கு விற்பதன் மூலம் கடனை அடைத்து விடும் என தெரிவித்தது.

 

2018 செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிக்சன் கடனை அடைத்து விடும்படி நீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனிடையே சொத்துக்களை விற்பதற்கான குறுக்கீடுகள், எரிக்சனின் திவால் வழக்குகள் மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தின. இதனை அடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனக்கு 60 நாள் கூடுதல் அவகாசம் தருமாறு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு ஆணையத்தில் (NCLT) கேட்டு கொண்டது.

( Read this post after the advertisement… )

 உச்ச நீதிமன்றமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசத்தை அனுமதித்து, வரும் டிசம்பர் 15 ம் தேதிக்குள் கடனை முழுமையாக அடைக்க வழிவகை செய்துள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் 15 ம் தேதி வரையிலான காலத்திற்கு தினசரி 12 சதவீத தனி வட்டியில் கடனை அடைக்க வேண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இந்நிலையில் நிறுவனம் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (RCom) மற்றும் அதனை சார்ந்த ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் மொத்த வங்கி கணக்குகள் 144 எனவும், அவற்றிலிருக்கும் மொத்த தொகை (Bank Balance) 19.34 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில்  உள்ள 119 வங்கி கணக்குகளில் உள்ள தொகை ரூ. 17.86 கோடி மட்டுமே. மீதம் உள்ள 1.48 கோடி ரூபாய் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் 25 கணக்குகளில் இருந்தது. வெளியேறும் கட்டணம் மற்றும் சேவை கட்டணமாக மட்டும் ரூ. 230 கோடியை அமெரிக்க டவர் நிறுவனம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 13 ல் நடைபெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.