பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.