பெட்ரோல் நிலையங்களின் விசித்திரமான சோதனை

பெட்ரோல் நிலையங்களின் விசித்திரமான சோதனை

Indian Petrol Bunks’ Weird fact

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதும், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது (01-10-2018) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 72.82 என்ற அளவிலும், கச்சா எண்ணெய்(Crude Oil) WTI ரகம் 73.47 டாலராகவும் மற்றும் Brent ரகம் 83.22 டாலர் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

 

தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை(Petrol price) ரூ. 87.13 (லிட்டருக்கு) ஆகவும், டீசல் (Diesel) விலை லிட்டருக்கு ரூ. 79.40 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியில் டீசல் விலை 77.68 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.49 என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது. மும்பையின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 91.08 ரூபாயாக உள்ளது.

 

இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் மையங்களில் (Petrol Bunk / Pump) இருக்கும் விநியோகிக்கும் அளவுகளில் ஒரு விசித்திரமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நமது நாட்டில் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 100 ரூபாயை தொட்டதில்லை. ஆனால் வரும் நாட்களில் இந்த அளவை கடந்து விடும் வாய்ப்பும் அதிகமாகும்.

 

இதற்கு முன்னர் வரை, பெட்ரோல் பங்குகளில் விநியோகிக்கும் அளவுகள் 0.00 முதல் 99.99 என்ற இரட்டை இலக்க முறைகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதனை மூன்று இலக்குகளுக்காக (ரூ. 100 ) மாற்றியமைக்க  வேண்டியுள்ளது. நாட்டின் பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் இதுவரை மூன்று இலக்க அளவுகள் மாற்றி அமைக்கவில்லை என்றாலும், நவீன தொழில்நுட்ப காலத்தில் இது ஒரு பெரும் சிக்கலாக இருக்க போவதில்லை என சந்தையாளர்கள் கூறுகின்றனர்.

( Read this post after the advertisement… )

 எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் டீலர்களுக்கு இது சம்மந்தமான சிக்கலை எடுத்துரைத்தும், அதற்கான மென்பொருளை மேம்படுத்துவது (Software Upgrade) சம்மந்தமாகவும் விவாதித்து வருகிறது. தசம புள்ளிகளில் (Decimal Point) சில மாற்றங்களை மட்டும் செய்தால் சரியாகி விடும் எனவும் சில சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எப்படி இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 100 ரூபாயை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முன் டாலருக்கு எதிரான ரூபாய் ரூ. 100 ஐ தொட்டு விடுமா என்ற ஐயமும் ஏற்பட்டு உள்ளது. வளரும் நாடான நமக்கு உலக பொருளாதார அளவில் போட்டியும், அதனை சார்ந்த விலை மாற்றமும் வந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.