வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

Losing Momentum of Air Traffic in India – 5.62 percent growth in February 2019

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்தாலும், விமான நிறுவனங்களின் வருவாய் குறிப்பிடும்படியாக இல்லை. நாட்டில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் நிதி சிக்கலில் தவித்து கொண்டு தான் இருக்கின்றன. உள்ளூர் விமான சேவையில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5.62 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
5.62 சதவீத வளர்ச்சி என்பது உள்ளூர் விமான போக்குவரத்து(Domestic) சேவையில் கடந்த ஐந்து வருட காலத்தில் காணப்படும் மிகக்குறைவான வளர்ச்சியாக கருதப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் விமான பயணிகளின் எண்ணிக்கை 1.13 கோடியாக இருந்துள்ளது.  இது இதற்கு முந்தைய காலத்தில் 1.07 கோடி பயணிகளாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இண்டிகோ(Indigo -Interglobe Aviation) விமான நிறுவனம் பயணிகள் போக்குவரத்து சேவையில் 15 சதவீத வளர்ச்சியுடன் 49.31 லட்சம் பயணிகளை(Passenger Traffic) கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 15.58 லட்சம் மற்றும் 12.92 லட்சம் பயணிகளை கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 17 சதவீத வளர்ச்சியையும், அதே நேரத்தில் திவால் நிலையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் பயணிகளின் எண்ணிக்கையில் 28 சதவீத வீழ்ச்சியை கண்டது.

 

கடந்த மாதத்தில் விமான சேவையின் வளர்ச்சி குறைந்து இருப்பதற்கு விமான நிறுவனங்களின் நிதி சிக்கல், பைலட் பற்றாக்குறை மற்றும் நோட்டம்(NOTAM) ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. விமான சேவையை ரத்து செய்த முறையில் ஏர் இந்தியா நிறுவனம்(Air India) 8.15 சதவீத பங்களிப்பையும், ஏர் ஏசியா(Air Asia) மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 2.4 மற்றும் 2.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

சரியான நேரத்தில் விமானத்தை இயக்கிய முறையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சராசரியாக இருக்கையை நிரப்பும் பணியிலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 94 சதவீதத்தை பதிவிட்டு உள்ளன. பிப்ரவரி மாதத்தில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் ஸ்பைஸ் ஜெட்(Spice Jet) நிறுவனம் முதன்முறையாக, இண்டிகோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.

 

இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 43 சதவீதமும், ஸ்பைஸ் ஜெட் 13 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன. இவை இரண்டும் டாட்டா நிறுவனத்தின் விமான சேவை நிறுவனங்கள் ஆகும். கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 19 விமானங்களை தரையிறக்கம்(Grounded aircraft) செய்தது. இதன் மூலம் அதன் பயணிகள் எண்ணிக்கையிலும் 28 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.