நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

Infosys gains profit of Rs. 4,074 Crore in the Fourth Quarter – FY19

 

2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 4,074 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதன் வருவாய் 21,539 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,149 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானம் நான்காம் காலாண்டில் 665 கோடி ரூபாயாக இருக்கிறது.வரிக்கு முந்தைய லாபம்(PBT) 5,283 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2017-18ம் காலத்தில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் 18,083 கோடி ரூபாயும், நிகர லாபம் ரூ. 3,690 கோடியாகும். இதனை ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 19 சதவீத வளர்ச்சியை (YoY) பெற்றுள்ளது.

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் கையிருப்பு 62,778 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பு தொகை எவ்வளவு என்பதை, ஆண்டு இருப்பு நிலை அறிக்கையை(Balance Sheet) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 21,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,609 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை ஒப்பிடுகையிலும், தற்போது வெளியிடப்பட்ட நிகர லாபம் 13 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

 

நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் செலவின விகிதம் ரூ. 16,390 கோடியாகவும், இது மூன்றாம் காலாண்டு செலவினத்தை காட்டிலும் சற்று குறைவாக இருக்கிறது. பணத்திற்கு சமமாக(Cash Equivalents) நிறுவனத்திற்கு 2018-19ம் நிதி ஆண்டில் 19,568 கோடி ரூபாய் உள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆராயும் போது, இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் பத்து சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே வேளையில், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறுவனத்தின் விற்பனை (வருவாய்) அளவு வளர்ச்சி குறைந்து வருகிறது.

 

பங்கு மூலதனத்தின் மூலமான வருவாய்(ROCE & ROE) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளதை காட்டுகிறது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.