இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

India’s Top most Influential Brands – Reliance Jio takes Second Place

 

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமான இப்சோஸ், ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதல், கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக ஆராய்ச்சியை பல நாடுகளில் சேவையாக கொண்டுள்ளது.
சமீபத்தில் இந்த நிறுவனம் இந்தியாவிற்கான சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த(Influential Brands) பிராண்டுகளின் பெயர்களையும், அதனை சார்ந்த நிறுவன பெயர்களையும் வெளியிட்டது. நாட்டின் மிகச்சிறந்த பிராண்டாக,  ‘கூகுள்(Google)’ முதலிடத்தில் உள்ளது. கூகுள் பிராண்டு கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் அங்கம் வகித்து வருகிறது.

 

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் இரண்டாவது இடத்தை இம்முறை ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) பெற்றுள்ளது. கடந்த வருடம் அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜியோ மூன்றாவது இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மார்ச் மாத முடிவில் 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 840 கோடியாகவும் உள்ளது.

 

மூன்றாம் இடத்தில் பே.டி.எம்.(Paytm) நிறுவனமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் பேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் ஏர்டெல் மற்றும் பத்தாவது இடத்தில் ஆப்பிள்(Apple – Iphone) நிறுவனமும் உள்ளது. முதல் பத்து இடங்களில் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனமும், பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் சாம்சங் நிறுவங்களும் அடங்கும்.

 

சொல்லப்பட்ட தரவரிசை, மக்களின் நினைவில் இருந்த முக்கிய நிறுவன பிராண்டுகள், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனங்களின் முன்னணி சேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிராண்டுகளை ஆராய்ந்த பிறகே, மேற்சொன்ன தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இப்சோஸ்(Ipsos – Global Market research) நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.