நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

India’s GDP declined to 5.8 percent in January – March Quarter

 

நடப்பு வாரத்தில் மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) வெளியிட்ட பொருளாதார தகவலில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) விகிதம் 2018-19ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர் 2013-14ம் வருடத்தில் காணப்பட்ட 6.4 சதவீதமே அப்போதைய குறைந்த வளர்ச்சியாக சொல்லப்பட்டது.தற்போதைய அறிவிக்கப்பட்ட 5.8 சதவீத வளர்ச்சி என்பது கடந்த ஐந்து வருடங்களில் குறைவாக காணப்பட்டதாகும். கடந்த 2018-19ம் நிதியாண்டு முழுவதுமான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(Gross Domestic Product) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட மந்த நிலையே.

 

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதமும்(Unemployment rate) கடந்த 45 வருடங்களில் காணப்படாத அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட இந்த பொருளாதார புள்ளிவிவரங்கள் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளன.

 

நாட்டின் புதிய நிதி அமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும்(Seethalakshmi Ramasamy College), முதுகலை மேற்படிப்பை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

 

வரும் ஜூலை மாதத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தொய்வை ஏற்படுத்தியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை  

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.