நாட்டின் நிதி பற்றாக்குறை 95 சதவீதமாக உயர்வு

நாட்டின் நிதி பற்றாக்குறை 95 சதவீதமாக உயர்வு

Country’s Fiscal Deficit at 95 percent of Financial Year 2019 Mark

 

நாட்டின் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit of India) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து 94.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாத இறுதியில் அரசாங்கத்தின் வரவு-செலவுக்கான இடைவெளி 5.90 லட்சம் கோடியாக உள்ளது.

 

இது சம்மந்தமாக பொது கணக்கு கட்டுப்பாடு (CGA – Controller General of Accounts) வெளியிட்டுள்ள தகவலில் நடப்பு நிதியாண்டுக்கான மதிப்பீட்டில் 95 சதவீதம் இடைவெளியை கொண்டுள்ளது. 2018-19 நிதியாண்டுக்கான  மதிப்பீட்டு அளவு 6.24 லட்சம் கோடி ரூபாயாகும். இவற்றில் கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் 5.90 லட்சம் கோடி வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதத்தில் நிதி பற்றாக்குறை (2017-18) 96 சதவீதமாக இருந்துள்ளது. நடப்பு நிதி வருடத்தில் இதுவரையிலான மொத்த செலவுகள் ரூ. 10.70 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ. 4.64 லட்சம் கோடியாகவும் உள்ளது.

 

வரி வருவாயாக ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 3.66 லட்சம் கோடி மற்றும் நிகர வரி வருவாய் ரூ. 98,330 கோடியாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் வரி வருவாய் 22 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த வரி வருவாயின் அளவு 12 சதவீதமாக இருக்கும் எனவும், நடப்பு நிதி ஆண்டுக்கான மூலதன செலவில் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.