பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

India’s First 100 Billion Dollar Company on Market Cap – TCS

 

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான  டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) சமீபத்தில் தான் தனது  2017 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. காலாண்டு முடிவில் நிறுவனம் லாபமாக ஈட்டிய தொகை ரூ. 6904 கோடி.

 

இதனை தொடர்ந்து TCS நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியாக ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும் அறிவித்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நேற்று ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்படுத்தியது.

 

பங்குச்சந்தையில் திரட்டப்படும் Market Capitalisation என்று சொல்லப்படும் சந்தை மூலதனத்தில் 1000 கோடி டாலரை(1000 Crore US Dollar) கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் படைத்தது. உலகளவில் முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம்  87,700 கோடி டாலர் மதிப்புடையதாகும்.

( Read this post after the advertisement… )

  

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்த நிறுவனம் 6 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தில் நிலைபெற்று, வார நாள் இறுதியில் 990 கோடி டாலருக்கு சற்று மேலாக முடிவடைந்தது. இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனமாக மாறியது.

 

TCS நிறுவனம் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், அதன் கிளைகள் 46 நாடுகளிலும் பரவியிருக்கிறது. நிறுவனத்தின் மரியாதைக்கு ஏற்ப பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 35 % பெண் ஊழியர்கள் இருப்பதும் இந்த நிறுவனத்திற்கு பெருமைக்குரியதாகும்.

 

டாடா குழுமத்தின் லாபத்தில் 85 % பங்கு TCS நிறுவனத்தின் மூலம் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. TCS நிறுவனம் உலகின் முதல் 100 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகவும், தற்போது 97 வது இடத்திலும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.