மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி

மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி

India’s Air Passenger Traffic growth in May 2019

 

துரிதமாக செயல்பட்டு கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்(Jet Airways) கடந்த சில காலங்களாக கடன் சிக்கலில் மாட்டி கொண்டு, தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. விமான சேவையும் ஏற்கனவே நிறுத்தப்பட்டதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 16,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் அடுத்தகட்ட வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.பொதுவாக மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து(Passenger Traffic) மற்ற மாதங்களை காட்டிலும், கணிசமான வளர்ச்சியை பெற்றிருக்கும். இம்முறையும் விமான போக்குவரத்து சுமார் 3 சதவீத வளர்ச்சியை கடந்த மே மாதத்தில் கண்டிருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் விமான போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.

 

ஸ்பைஸ் ஜெட்(Spicejet) நிறுவனம், பயணிகள் போக்குவரத்தில் கடந்த மே 2018 ஐ காட்டிலும் இம்முறை 24 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் சந்தை மதிப்பு 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த நான்கு வருடங்களில் இருந்த உச்சபட்ச மதிப்பில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உள்ளது.

 

கோ-ஏர்(GoAir) நிறுவனம் மே மாதத்தில் 31 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் முறையே ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ(Interglobe Aviation -Indigo) விமான நிறுவனம் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சுமார் 23 சதவீதமாக காணப்பட்டது.

 

ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனமும் மே மாதத்தில் 9 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச வளர்ச்சியாகும். விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

பெரும்பாலான விமான நிறுவனங்கள் கடந்த மாதத்தில் வளர்ச்சியை கொண்டிருந்தாலும், பயணிகள் இருக்கை சுமை(Passenger Load factor) எண்ணிக்கையில் வளர்ச்சியை பெறவில்லை. கோ-ஏர் மற்றும் ஏர் இந்தியா இரு நிறுவனங்களை தவிர்த்து மற்ற விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகள் இருக்கையை கணிசமாக நிரப்ப வில்லை எனலாம்.

 

இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 63,945 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 8,200 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.400 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக நேற்று ரூ.31.65 என்ற விலையிலும் வர்த்தகமாகி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளருக்கு 90 சதவீத வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.