நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

Alert: India’s increasing Trade Deficit – 10.89 Billion US Dollar

 

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அரசாங்கம் குறைக்க முனைந்தாலும், உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை காட்டிலும், அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகமாக காணப்பட்டால், அதுவே நாட்டின் வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு கடன் சுமையாகவே நாம் பார்க்கலாம். வர்த்தக பற்றாக்குறையின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்காமல் இருக்க, இறக்குமதி அளவை நாம் குறைத்தாக வேண்டும். இல்லையெனில், நாட்டின் ஏற்றுமதி அளவை அதிகரிக்க தயாராக வேண்டும்.

 

சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க-சீன வர்த்தக போருக்கான காரணமே, அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தான். இதன் காரணமாகவே சீன பொருட்களுக்கு அமெரிக்கா(US-China Trade War) இரு மடங்கிற்கு மேல் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மார்ச் மாத முடிவில் 10.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

 

நடப்பு வருட பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.60 பில்லியன் டாலராகவும், இதற்கு முந்தைய வருடத்தின் மார்ச் மாதத்தில் 13.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட மார்ச் 2019ம் காலத்தில் ஏற்றுமதியில்(Exports India) 11 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது. இதற்கு ரசாயனங்கள், பொறியியல் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் வளர்ச்சி துணைபுரிந்துள்ளது.

 

இறக்குமதியின் பங்களிப்பு மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 6.3 பில்லியன் டாலரிலிருந்து மார்ச் மாதத்தில் 8.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியும் மார்ச் மாத காலத்தில் கணிசமாக உயர்ந்து நிகர மதிப்பு அடிப்படையில் 2.97 பில்லியன் டாலராக இருந்தது.

 

கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி(Crude Import) செய்வதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் சுமார் 11,200 கோடி டாலராக இருந்தது. இது இதற்கு முந்தைய வருடத்தில் 8,800 கோடி அமெரிக்க டாலராக இருந்துள்ளது.

 

இந்தியாவின் வர்த்தக பங்காளராக முதல் மூன்று இடங்களில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளது. தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியின் அளவை அரசு குறைக்க, கடந்த சில வருடங்களாக நடவடிக்கை எடுத்து வந்த பின்பும் உள்நாட்டில் தேவைப்பாடு அதிகமாயுள்ளது. தங்க இறக்குமதி அளவை குறைப்பதற்காக தங்க முதலீட்டில் பல்வேறு திட்டங்களும் (Gold ETF, Bond Scheme, Gold Deposit), மாற்றங்களும் கொண்டுவரப்பட்டிருந்தது. இது போல வாகன துறையில் அடுத்து வரவிருக்கும் காலங்களில் மின்சார வாகனங்கள் முக்கியத்துவம் பெறும் காலம் வெகு விரைவில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.