2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

6.84 Crore Income Tax Returns filed during Financial year 2017-18

 

2018-19 மதிப்பீடு ஆண்டுக்கான (Assessment Year 2018-19) வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31ம் தேதியிலிருந்து நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 31 ம் தேதியாக அறிவித்துள்ளது நேரடி வரிகளின் மத்திய வாரியம்(Central Board of Direct Taxes).

 

2017-18 ம் நிதியாண்டில் (Financial year) பெற்ற வருமானத்திற்காகவே 2018-19 (Jan-Dec 2018) மதிப்பீடு காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி அறிவித்த பின்பும், பொது மக்களிடையே ஒரு குழப்பம் இருந்தது. அதாவது CBDT அறிவித்த தகவலில், குறிப்பிட்ட பிரிவுகளில் வரும் வரிதாரர்களுக்கு மட்டுமே ஆகஸ்ட் 31, கடைசி தேதியாகும் என எடுத்து கொள்ளப்பட்டது. தற்போது இதனை சரியாக விளக்கமளிக்கும் விதத்தில் வருமான வரி தாக்கல் இணையத்தளத்திலே, ‘ உங்களின் வருமானம் (Income Tax Return) எந்த வரி தணிக்கைக்கு உட்பட்டதாக இல்லாத போது ‘ கடைசி தேதியாக ஆகஸ்ட் 31 இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

இதனால் சம்பளம் பெறும் வரிதாரர்கள் அனைவருக்குமான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஐ எடுத்து கொள்ளலாம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியையும் மார்ச் 31, 2019 ஆக CBDT அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 30, 2018 காலக்கெடுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான வழக்கும் நிலுவையில் உள்ளது.

( Read this post after the advertisement… )

 
ஆதார் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் முறையை கட்டாயமாக்க கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது வருமான வரி தாக்கலை பூர்த்தி செய்ய ஆதார் மூலமான ஆய்வு, வங்கி கணக்கு, இன்டர்நெட் பேங்கிங், டீமேட் கணக்கு, தபால் மூலம் என ஐந்து வகைகளில் செய்யலாம்.

 

2017-18 ம் நிதியாண்டில் மட்டும் 6.84 கோடி கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 2016-17 ம் நிதி வருடத்தில் 5.43 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் (Apr-Jun 2018 -Updated as on 30-06-18) சுமார் 77,24,900 கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

Filing Category and Income wise

( Range1 =>  Up to ₹5,00,000, Range2 =>  ₹5,00,001 – ₹10,00,000, Range3 =>  ₹10,00,001 – ₹20,00,000, Range4 =>  ₹20,00,001 – ₹50,00,000, Range5 =>  ₹50,00,001 – ₹1,00,00,000, Range6 =>  Above ₹1,00,00,000 )

 

வருமான வரி தாக்கல் இணையதளத்தின் புள்ளிவிவரங்களின் படி, 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை சுமார் 56,20,300 ஆகவும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களில் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை 12,74,470 ஆகவும் உள்ளது. அனைத்து பிரிவுகள் உட்பட 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்களின் தாக்கல் எண்ணிக்கை 58,55,770 ஆகும். அதே நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி தாக்கல் எண்ணிக்கை 10,058 ஆக கொண்டுள்ளது.

 

நடப்பு நிதியாண்டில் வரி தாக்கல் செய்யப்பட்ட மாநில அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (6,31,400) உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் (12,12,780), இரண்டாம் இடத்தில குஜராத் மாநிலமும் (9,59,887) உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.