ஐ.டி.எப்.சி. வங்கி இனி ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் (IDFC First)

ஐ.டி.எப்.சி. வங்கி இனி ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் (IDFC First)

IDFC Bank is now IDFC First Bank

 

ஐ.டி.எப்.சி. (Infrastructure Development Finance Company) குழுமத்தின் ஒரு அங்கமான ஐ.டி.எப்.சி. வங்கி கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளையும், 1,12,160 கோடி ரூபாய் சொத்து மதிப்பையும் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்த துறையில் உள்ள நிறுவனங்களுக்கும், தனியார் வாடிக்கையாளர்களுக்கும் கடன்களை வழங்கி வருகின்றன.

 

ஐ.டி.எப்.சி. வங்கி அதிகபட்ச கடனாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு கடந்த வருடத்தில் 300 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்த வங்கியுடன் கேப்பிடல் பர்ஸ்ட் (Capital First) நிறுவனத்தை இணைப்பது சம்மந்தமான கோரிக்கை  வருடத்தின் தொடக்கத்தில் துவங்கப்பட்டது. கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் சிறு தொழில்களுக்கான கடனை வழங்கி வரும் நிதி சேவை நிறுவனமாகும். 10,000 ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கும் நிறுவனமான இதற்கு 225 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

 

நிதி சேவை (Financial Services) சார்ந்த இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு நேற்று (18-12-2018) தேசிய கம்பெனி சட்டம் தீர்ப்பாயம் (NCLT) மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இனி ஐ.டி.எப்.சி. வங்கி, IDFC First Bank என அழைக்கப்படும். வரும் ஜனவரி 2019 முதல் இதன் புதிய பெயரிலான சேவை தொடங்கப்படலாம். ஐ.டி.எப்.சி. வங்கி 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பையும், ஒரு பங்குக்கு 44 ரூபாய் புத்தக மதிப்பையும் (Book Value) கொண்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 



கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் 5,600 கோடி ரூபாய் சந்தை மதிப்பு (Market Capitalization) மற்றும் ஒரு பங்குக்கு 295 ரூபாய் புத்தக மதிப்பையும் கொண்டு இயங்கி வருகிறது. இணைப்பிற்கு பின் (Merger), ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக இருக்கும். வங்கிகளின் கிளை 203 என்ற அளவிலும், அதன் கடன் சொத்துக்கள் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. வைத்தியநாதன், ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார். ஐ.டி.எப்.சி. வங்கியின் தலைவர் திரு. ராஜிவ் லால் இனி IDFC First வங்கியின் நிர்வாகம் அல்லாத தலைவராக (Non Executive Chairman) இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பிறந்த திரு. வைத்தியநாதன் தனது பள்ளிக்காலத்தை சென்னையில் தொடங்கி, மேற்படிப்பை ராஞ்சியில் உள்ள பிர்லா கல்வி நிறுவனத்தில் (BIT Mesra) முடித்தார். Citibank மற்றும் ICICI வங்கியில் பணிபுரிந்த இவர் 2012 ம் ஆண்டு தனது கேப்பிடல் பர்ஸ்ட் நிதி சேவையை துவக்கினார். இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களில் 40 % தொடர்ச்சியான லாப வளர்ச்சியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 327 கோடி ரூபாயாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.