அப்பல்லோ இன்சூரன்ஸை கையகப்படுத்தும் எச்.டி.எப்.சி.(HDFC) நிறுவனம்

அப்பல்லோ இன்சூரன்ஸை கையகப்படுத்தும் எச்.டி.எப்.சி.(HDFC) நிறுவனம்

HDFC acquires Apollo Munich Health Insurance

 

அப்பல்லோ முனிச்(Apollo Munich) காப்பீடு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு அங்கமாக உள்ளது. இதனை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது எச்.டி.எப்.சி. நிறுவனம் களம் இறங்கியுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே எச்.டி.எப்.சி – எர்கோ(HDFC Ergo) காப்பீடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸை வாங்கிய பின், அது எச்.டி.எப்.சி – எர்கோ காப்பீட்டுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸின் 51 சதவீத பங்குகளை எச்.டி.எப்.சி. வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1,336 கோடி ரூபாய்.

 

1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தில் 43,557 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதன் சந்தை மதிப்பு 18,800 கோடி ரூபாயாகவும், மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 77 கோடியாகவும் உள்ளது.

 

அப்பல்லோ முனிச் காப்பீடு நிறுவனம் தனி நபர் விபத்து காப்பீடு(Personal Accident) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) சேவைகளை வழங்கி வருகிறது. எச்.டி.எப்.சி. எர்கோ மற்றும் அப்பல்லோ முனிச் இணைப்பிற்கு பிறகு, அதன் மொத்த காப்பீட்டு பிரீமியம் 10,800 கோடி ரூபாயாகவும், சந்தை மதிப்பு 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

அப்பல்லோ முனிச் நாடு முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட நெட்ஒர்க் மருத்துவமனைகளையும், 180 க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும் கொண்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான கடன் சேவையை அளித்து வருகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 3,74,000 கோடி ரூபாயாகும்.

 

கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,580 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 2,862 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போது ஏற்படப்போகும் கையகப்படுத்தல் இந்திய காப்பீட்டு சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.