23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைப்பு

23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைப்பு

GST for 23 products were reduced to 18 Percent

 

நேற்று (22-12-2018) நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் வரிக்கான (Goods and Services Tax) 31வது கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி ஒரு முறைமுக வரியாகும். இதனை நுகர்வு வரி எனவும் சொல்லலாம். ஜி.எஸ்.டி. வரி அமைப்பு ஐந்து அடுக்குகளை கொண்டுள்ளது – 0%, 5%, 12%, 18% மற்றும் 28 சதவீதம். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரியாக குறைக்கப்பட்டது.

 

மூன்றாம் நபர் காப்பீடு (Third party insurance), திரையரங்கு கட்டணம் (Movie Tickets), 32 இன்ச் டி.வி மற்றும் மானிட்டர்கள், லித்தியத்திலான பவர் பேங்குகள் (Power Banks), டிஜிட்டல் கேமரா மற்றும் சில பொருட்களுக்கான வரி விகிதம், முன்னர் இருந்த 28 சதவீத அளவிலிருந்து 18 சதவீத வரியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி உதிரி பாகங்கள் 5 சதவீத வரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து இதுவரை 360 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள், சிறிய சேவை வழங்குவோர்களுக்காக எளிய வரி விதிமுறைகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

நேற்று அறிவிக்கப்பட்ட வரி (GST) குறைப்பால் மத்திய அரசுக்கு 5500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2019 ம் ஆண்டில் மேலும் சில பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதம் குறைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த வரி குறைப்பு வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வரும். ஒரு சில நாட்களுக்கு முன், ‘ 99 சதவீத பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 18 சதவீதம் அல்லது அதற்கு குறைவாகவோ அமைக்க அரசு முனைந்துள்ளதாக ‘ பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

( Read this post after the advertisement… )

 அதிகபட்ச விகிதமான 28 % வரி அடுக்கில் தற்போது மொத்தம் 28 பொருட்கள் உள்ளன. ஆடம்பர பொருட்களும், சிமெண்ட் மற்றும் வாகனம் சார்ந்த பொருட்களும் இந்த வரி விதிப்பில் அடங்கும். இவற்றில் சிமெண்ட் மற்றும் வாகனம் சார்ந்த பொருட்களுக்கான வரி விகிதத்திலும் அடுத்த கூட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என தெரிகிறது. 28 சதவீத வரி அடுக்கில் ஆடம்பர மற்றும் இதர (Sin Goods) பொருட்களும், 13 வாகனம் சார்ந்த பொருட்களும் மற்றும் சிமெண்ட் வகையில் ஒரு பொருளும் உள்ளது. அரசுக்கு சிமெண்ட் மூலமான ஜி.எஸ்.டி. வரி (Tax Revenue வருவாய் ரூ. 13,000 கோடி எனவும், வாகன பொருட்களுக்கான வரி வருவாய் 20,000 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

பெட்ரோலிய பொருட்கள், மது பானங்கள், மின்சாரம் போன்றவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இல்லை. அதற்கு பதிலாக இந்த மூன்றும் மாநில அரசின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வரம்பில் வரும்பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.