நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய பிக் பஜார் பியூச்சர் குழுமம்

நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய பிக் பஜார் பியூச்சர் குழுமம்

The Future Retail Group turned from Quarterly loss to Profits – Q4FY19

 

பல்பொருள் அங்காடியில் பிக் பஜார், புட் பஜார்(Food Bazaar), நீல்கிரிஸ்(Nilgiris), ஹைப்பர் சிட்டி(Hypercity) போன்ற பிராண்டுகளின் மூலம் உணவு பொருள் சந்தையில் வலம் வரும் நிறுவனம் தான் பியூச்சர் குழுமம்(Future Group). இக்குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பியூச்சர் ரீடெயில் உள்ளது.சமீபத்தில் வெளிவந்த நான்காம் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 203 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய மார்ச் 2018ம் காலாண்டில் பியூச்சர் நிறுவனம்(Future Retail Ltd) 464 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 5,397 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 291 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

மார்ச் 2018ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதி வருடத்தில் ரூ.11 கோடியை மட்டுமே லாபமாக நிறுவனம் பெற்றிருந்தது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் நிறுவனம் கணிசமான லாபத்தினை பதிவு செய்துள்ளது. இதனால் சென்ற மார்ச் காலாண்டில் நஷ்டத்தில் இருந்த பியூச்சர் ரீடெயில் நிறுவனம் நடப்பு வருடத்தின் மார்ச் 2019ம் காலாண்டில் லாபத்திற்கு(Net Profit) திரும்பியுள்ளது.

 

நிறுவனத்தின் கடன் ரூ. 2,554 கோடியாகவும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) 20 சதவீதத்திற்கு மேலாகவும், ஒரு பங்குக்கான வருவாய் 14 ரூபாயாகவும்(EPS) இருக்கிறது. விற்பனை வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று வருடங்களில் 124 சதவீதமாகவும், 5 வருட காலத்தில் 66 சதவீதமாகவும் உள்ளது.

 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 47 சதவீதமாக இருக்கின்ற நிலையில், நிறுவனர்கள் தங்களது பங்கில் 48 சதவீதம் என்ற அளவில் அடமானம்(Pledging) வைத்துள்ளனர் என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதகமான விஷயமாகும். கடந்த வருடத்தின் முடிவில் ரொக்கமாக ரூ. 183 கோடியும், இருப்பு நிலை அறிக்கையின் கையிருப்பில்(Reserves) மார்ச் 2019 முடிவின் போது 3,750 கோடி ரூபாயும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.