திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

ESSAR Steel seeking to withdraw from IBC

உலகின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான எஸ்ஸார் ஸ்டீல் (ESSAR Steel) பல  ஆண்டுகளாகவே இந்திய பிராந்தியத்தில் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறது. சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மத்திய அரசின் திவால் சட்டத்தின் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தான் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் ருயா (Ruias) குழுமத்தினர் கடனை திரும்பி செலுத்துவதற்கான முறையை, தங்களது பங்குதாரர்களிடம் முன்மொழிந்துள்ளனர். இதனால் நிறுவனத்தை திவால் சட்டத்திலிருந்து (Insolvency and Bankruptcy Code -IBC) காப்பாற்றலாம். ருயா குழுமத்தினர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவர். இந்த நிறுவனம் கடந்த 2017 ம் நிதியாண்டில் நிகர நஷ்டமாக ரூ.5,620 கோடியை வெளியிட்டுள்ளது.

 

பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாமல் இருக்கும் இந்த ஸ்டீல் நிறுவனம், தற்போது தனது நிறுவனத்தின் கடனை அடைக்க முன்வந்துள்ளது. ஒரு முறை செலுத்தும் வாயிலாக 54,389 கோடி ரூபாயை கொடுக்க ருயா குழுமத்தினர் (Ruias Group) தயாராகி வருகின்றனர். இதன் மூலம் அதன் கடன்தாரர்களுக்கு 100 சதவீத கடனை அடைக்கும் நடவடிக்கையை நிறுவனம் எடுத்து வருகிறது. இதற்கான நடவடிக்கைக்கு பங்குதாரர்கள் பச்சை கோடி காட்டியுள்ளனர்.

( Read this post after the advertisement… )

 ஏற்கனவே நிறுவனத்தின் கமிட்டி ஒன்று (Committee of Creditors -COC) அர்செல்லர் மிட்டல் நிறுவனம் வாங்குவதற்கான முயற்சியை கையாண்டு வந்தது. அர்செல்லர் நிறுவனம் 42,200 கோடி ரூபாய் அளவிலான கடனை அடைக்க முன்வந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தான் ருயா குழுமத்தினர் தங்களது நிறுவனத்தின் கடனை தாமே அடைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

 

அர்செல்லர் மிட்டல் (ArcelorMittal), லட்சுமி மிட்டல் அவர்களின் நிறுவனமாகும். அர்செல்லர் மிட்டல் நிறுவனம் லக்சம்பர்க் நகரத்தை (Luxembourg City) தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாகும் (Steel Producing). எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 18 கோடியாகவும், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் வழங்கிய கடன் 49,390 கோடியாகவும், மற்றவை நிறுவன செயல்பாட்டிற்கு கடன் வழங்கியவர்கள் (Operational Creditors) ஆவர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.