அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

US Defence Secretary James Mattis resigns – News for the Stock Market Crash

 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட பல அளவுகோல்கள் இருந்தாலும், இவையனைத்தும் ஒரே இடத்தில் அமைய பெற்றது அந்த நாட்டினுடைய பங்குச்சந்தை தான். வெறும் முதலீட்டுக்கான மற்றும் பணம் பண்ணுவதற்கான சந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நாட்டின் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தை சார்ந்து தான் பங்குச்சந்தை இயங்கி கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வெள்ளிக்கிழமை அன்று (21-12-2018) வெளிவந்த அமெரிக்க செய்தி ஒன்று, உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தின. சிரிய நாட்டிலிருந்து தனது நாட்டு ராணுவ படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்த செய்தி, மற்ற நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின் போது, சிரியா நாட்டில் ஆக்கிரமித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை களைய அமெரிக்க படைகள் களமிறக்கப்பட்டன.

 

ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க படைகள் வெற்றி பெற்றதாகவும், இனி மேல் அங்கு படைகள் இருப்பதற்கான வேலையெதுவும் இல்லையென்றும் அதிபர் டிரம்ப் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்று கொள்ளும் (Getting out of Syria). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் ஈரான், ரஷ்யா மற்றும் சிரியா மட்டுமே ‘ என்றார்.

 

இந்த செய்தியை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் ராஜினாமா செய்த விஷயமும் அமெரிக்காவில் சூடான விவாதமாக அமைந்தது. அதிபர் (President Trump) ட்ரம்பின் படைகளை திரும்ப பெறுவதற்கான முடிவில் தனக்கு திருப்தி இல்லை என பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் (James Mattis), தனது  பதவியிலிருந்து விலகி கொண்டார். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லைச்சுவர் (அமெரிக்க-மெக்ஸிகோ – Mexico Wall) கட்டுவதற்கான நிதி கோரிக்கையை வலியுறுத்தியதால் மத்திய அரசாங்கத்தை மூடுவதற்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 அமெரிக்காவில் நடந்த இந்த செய்திகள் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற விஷயம் பங்குச்சந்தைக்கு பாதகமான செய்தியாக அமைந்தது. பொதுவாக நமது நாட்டில் தான் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு பங்குச்சந்தை செவி சாய்க்கும். அமெரிக்க நாட்டில் அவ்வாறு நடைபெறுவது கிடையாது.  ஆனால் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் விஷயத்தில் ஒவ்வொரு செய்தியும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

முன்னர் வட கொரிய அணு சார்ந்த பிரச்சனை, அமெரிக்க-சீன வர்த்தக போர், விசா விவாகரம், ஈரானுடன் கச்சா எண்ணெய் பிரச்சனை போன்றவை நடப்பு அமெரிக்க அரசில் பேசப்பட்ட செய்திகளாகும். வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market) வெகுவான இறக்கத்தை அடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty 50) சுமார் 200  புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சந்தை கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவிலும் முடிவடைந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.