கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

Crude oil prices fell below $70 a barrel

 

ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை நான்கு வருடங்களுக்கு (2014) முன், பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது நினைவிருக்கலாம். அதே காலத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் (West Texas Intermediate -WTI) கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு அதிகபட்சமாக 90 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. தற்போது ப்ரெண்ட் எண்ணெய் 70 டாலருக்கு குறைவாகவும், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலர் அளவிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

 

இந்தியாவின் கச்சா எண்ணெய் (Crude oil) தேவை அதிகரிப்பால், நடப்பு மாதம் முதல் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய முன்னரே ஒப்பந்தம் இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே வர்த்தக போர் இருப்பினும் இந்தியாவுக்காக, அமெரிக்கா தனது பிடியை தளர்த்தியது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தாலும், நமது நாட்டிற்கு அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

ஓமன் வளைகுடாவில் அமையப்போகும் சபார் (Chabahar Port) துறைமுகத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். இதனால் பயன்பெற போகும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தான்  நாட்டுக்கு உதவும் நோக்கில் இந்தியாவின் சபார் கட்டமைப்பை இணக்கம் காட்டி, ஈரானுடன் வர்த்தகம் புரிய அனுமதி அளித்துள்ளது.

 

உலகளாவிய எண்ணெய் தேவை மற்றும் பொருளாதார மந்த நிலையால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த மாதம் 10 ம் தேதி முடிவில் 83 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஒரு வார அதிகபட்ச விலையாக பேரலுக்கு 73 டாலராக இருந்தது.

( Read this post after the advertisement… )

 ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி (Iran Crude oil import) செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. நடப்பு வருடத்தில் மட்டும் இந்தியா, ஈரானிலிருந்து சராசரியாக தினமும் 5,77,000 பேரல்களை இறக்குமதி செய்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 2-3 டாலர் வரை விலை குறைவாக கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

 

அதே நேரம் ஈரானில் மற்ற நாடுகளின் தேவையால் இந்தியாவில் தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் கேஸ் சிலண்டரின் விலையும், மாதத்தின் துவக்கத்தில் 1000 ரூபாயை நெருங்கியுள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, இரவு 10:30 மணியளவில் (இந்திய நேரம் – 11-09-2018) 69.80 டாலர் ($69.80 / barrel) அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.