புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

New Chip based e-passport for the Public in India

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1997ம் ஆண்டு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்(Foreign Tourists) எண்ணிக்கை 24 லட்சமாக இருந்தது. இதுவே கடந்த 2017 ம் வருடத்தில் ஒரு கோடி எண்ணிக்கையை தாண்டியது. சுற்றுலா பயணிகளின் மூலம் பெறும் வருமானமும் நம் அரசுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொடுத்துள்ளன.
1997ம் ஆண்டில் 10,500 கோடி ரூபாயாக இருந்த வருமானம், கடந்த 2017ம் ஆண்டில் ரூ.1,77,874 கோடியை தாண்டியுள்ளது. சுற்றுலா துறை நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்கினை கொண்டுள்ளது. நமது நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளும் அன்னிய நாட்டினரின் எண்ணிக்கையில் முதல் மூன்று இடத்தில் வங்கதேசம், அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகையை கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் (புள்ளிவிவரம்-2015) உள்ளது. இந்த துறையில் தமிழகத்தின் பங்கு சுமார் 20 சதவீதமாகும்.

 

இது போல நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகமாக உள்ளது. வேலை, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற வெவ்வேறு வகைகளில் இந்தியர்கள் வெளிநாட்டிற்கு தொடர்ச்சியாக செல்கின்றனர். கடந்த 2018 ம் வருடம் மட்டும் இஸ்ரேல்(Indian Tourists in Israel) நாட்டிற்கு சென்ற இந்திய சுற்றுலாதாரர்களின் எண்ணிக்கை 70,800 ஆகும்.

 

எல்லோருக்கும் வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வம் இருந்தாலும் பெரும்பாலோர் பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறைகளில் தங்களுக்கு ஏற்படும் சிக்கலால் வெளிநாட்டு பயணம் என்ற எண்ணத்தை மறந்து விடுகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக இ-சேவா முறை மூலம் பாஸ்போர்ட் விநியோகம் எளிதாக அமைந்ததுடன், பாஸ்போர்ட் பெறுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2018 ம் வருடம் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2.7 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

புதிய சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட்(New Chip based E-passport) அளிக்கும் நடைமுறையையும் அரசு கடந்த 2017 ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. முதலில் அரசு அலுவல்கள் சார்ந்தே அளிக்கப்பட்டு வந்த இ-பாஸ்போர்ட் இனி பொதுமக்களுக்கும் விரைவில் வர உள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரின் அனைத்து விவரங்களும் சிப் வடிவில்(Chip) சேமிக்கப்படும் எனவும், முன்னும்-பின்னும் தடிமனான அட்டைகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

குடியேற்ற நுழைவுகளில் (Immigration Counters), இ-பாஸ்போர்ட் சில நொடிகளில் தேவைப்படும் விவரங்களை செயல்படுத்தும். 64 கிலோ பைட்டு(64 KB) நினைவகம் கொண்டுள்ள இந்த சிப் வடிவிலான இ-பாஸ்போர்ட் சுமார் 30 வருகைகள் வரையிலான தகவல்களை சேமித்து வைத்திருக்கும். இது பாஸ்போர்ட் வைத்திருப்போரின் புகைப்படத்தையும், கைரேகைகளையும் பாதுகாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 

முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட், அதற்கான மென்பொருளை ஐ.ஐ.டி கான்பூரில் (IIT Kanpur) உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் எந்த வணிக நிறுவனமும் ஈடுபடவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.