தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

Is BSNL Telecom in tamilnadu shutting down ?

 

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியால் குரல் வழி அழைப்புகளும்(Voice based Calls), இணைய சேவைகளும் மேம்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னர் அழைப்புகளுக்கும், இணைய சேவைகளுக்கும் தனித்தனியே கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின்(JIO) வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒருமித்த கட்டணங்களை வசூலிக்க தொடங்கின.

 

இன்று தொலைத்தொடர்பு சேவையில் அளவில்லா அழைப்புகள்(Unlimited calls) மற்றும் இணைய சேவைகளுக்கு ஒரே கட்டணமாக பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயும்(Arpu) நிறுவனத்திற்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் முன்பை விட, தற்போது கூடுதல் கட்டணத்தை மறைமுகமாக செலுத்தி வருகின்றனர்.
இணைய சேவையில் நுகர்வோரின் தேவை ஒவ்வொரு நாளும் மாறுபட்டு கொண்டிருக்கும் நிலையில், அதனை சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதுமையை கொண்டு வரும் கட்டாயத்தில் உள்ளன. இதனை சமாளிக்க முடியாத நிறுவனங்கள் மற்றும் கடனில் தத்தளிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் சேவையை விட்டு விலகும் நிலையில் உள்ளது. ஏர்செல், யூனினார், வோடபோன்-ஐடியா(Vodafone-Idea) இணைப்பு போன்றவற்றை சொல்லலாம்.

 

போட்டியை சமாளிக்க முடியாத நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்(MTNL) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) நிறுவனமும் அடங்கியுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்பட உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

 

இதனை ஏற்கனவே மறுத்திருந்த தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘ பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிதி சிக்கலில் உள்ளன. கட்டண விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்(Tariff Competition), சேவையில் ஜியோவின் போட்டி ஆகியவற்றால் எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நிறுவனத்தை மூடும் எண்ணம் இல்லை ‘ என கூறியிருந்தார்.

 

கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் உள்ளன. பி.எஸ்.என்.எல். டெலிகாமில் சுமார் 1.64 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தொலைத்தொடர்பு துறையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. இதன் சேவைகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த சேவை நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.