அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

Anil Ambani’s Time line – The Narrow history of Reliance ADAG – Reliance Communication

 

பணக்காரர்களின் தொழில் வாழ்க்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் கதையாக இருந்தாலும், அவர்களின் தொழில் தோல்விகள் ஒவ்வொருவருக்கும் வரலாற்று பாடமாகவே அமைந்துள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நிறுவனங்கள் வெகு சிலவென்றே என சொல்லலாம். ஆனால் பின்னாளில் சறுக்கும் நிறுவனங்களே தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.
தொழிலில் போட்டி மற்றும் புதுமையான விஷயங்களை தக்க வைத்து கொள்ளாதது தான் பெரும்பாலான தொழில் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ரிலையன்ஸ்(Reliance) என்ற மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியவர் திருபாய் அம்பானி அவர்கள். அவரது காலத்திற்கு பின்பு, மைந்தர்களின் பங்களிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. அனைத்து குடும்பங்களில் ஏற்படும் சிக்கல் தான் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்திற்கும்.

 

திருபாய் அம்பானியின் பிள்ளைகள் முகேஷ் மற்றும் அனில் ஆகிய இருவரும் தங்களுக்கான தொழிலை பிரித்து கொண்டனர். உலக பணக்காரர்கள்  வரிசையில்முன்னணி வகித்த அம்பானி சகோதரர்கள் முதல் சமீபத்திய ஜியோ புரட்சி(JIO) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால் வரை இவர்களது தொழில் வரலாறு நீண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முகேஷ் அம்பானியால் துவங்கப்பட்டாலும், பின்னாளில் முகேஷ் தனது தந்தையின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிர்வகிக்க சென்றார்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அனில் அம்பானியிடம் சென்றது, பின்பு அனில் திருபாய் அம்பானி குழுமம்(Reliance ADAG) உருவாக்கப்பட்டது. 2002ம் வருடம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்போகாம்(Reliance Infocomm) என்ற நிறுவனம் தான் பிறகு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என மாற்றம் செய்யப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் சி.டி.எம்.ஏ.(CDMA) என்ற தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்த ஆர்.காம்(Rcom) நிறுவனம், 2010ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக 5860 கோடி ரூபாயை செலவிட்டது. 2016ம் வருடத்தில் எம்.டி.எஸ்.(MTS Mobile) நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கையகப்படுத்தியது.

 

ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Reliance Communications) நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த போட்டியினை சமாளிக்க முடியாமல் ஆர்.காம் நிறுவனம் திணறியது. ஜியோ வருகைக்கு பின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் காணாமல் போனது என்றே சொல்லலாம். அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ரா  போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம்(Spectrum) அலைவரிசையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தாமதப்படுத்தியதால், நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

 

செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல், தனது ஆர்.காம் நிறுவனத்தை திவாலாக அறிவித்தார் அனில் அம்பானி(Anil Dhirubhai Ambani). சில நாட்களுக்கு முன் நீதிமன்றம், ‘ அனில் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்த தவறினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் ‘ என எச்சரித்து இருந்தது நினைவிருக்கலாம். அதற்கான காலக்கெடு வரும் செவ்வாய் கிழமை அன்று (19-03-2019) முடிவடைகிறது. ஏற்கனவே அனில் அம்பானி ரிலையன்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட்(RNAM) நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து, அதனை தொடர்ந்து அந்த தொழிலை நிப்பான் லைப் நிறுவனத்தை வாங்க சொல்லியிருந்தார். ரிலையன்ஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தில் நிப்பான் லைப்(Nippon Life) ஒரு பங்குதாரராக உள்ளது கவனிக்கத்தக்கது.

 

இதனிடையே தற்போது பி.எஸ்.என்.எல்.(BSNL Telecom) நிறுவனமும் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை என வழக்கு தொடுத்துள்ளது. விமான ஒப்பந்தத்திலும்(Aircraft Deal) அனிலின் குழுமம் பிரச்னையில் உள்ளது. முகேஷ் அம்பானியை விட கல்வியிலும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய அனில் திருபாய் அம்பானி செலுத்த வேண்டிய கடனை செலுத்தி விட்டு, தனது குழுமத்தை மீட்டெடுப்பாரா, இல்லையெனில் வரலாற்றில் எதிர்மறையான நிலையை ஏற்படுத்துவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். (*அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை தாம் அளிப்பதாக கூறியுள்ளார் -திங்கட்கிழமை இரவு .)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.