வாங்க முடியாத வீடுகள் – மக்களின் வாங்கும் திறன் கடந்த நான்கு வருடங்களில் குறைவு

வாங்க முடியாத வீடுகள் – மக்களின் வாங்கும் திறன் கடந்த நான்கு வருடங்களில் குறைவு 

Affordable Housing – Purchasing power on Housing affordability declined in India

 

வீட்டு நிதி நிறுவனங்கள்(HFC) வழங்கிய வீட்டுக்கடன்கள் குறித்து பாரத ரிசர்வ் வங்கி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. கடந்த 2010ம் வருடம் முதல் காலாண்டு குடியிருப்பு சொத்து விலை கண்காணிப்பு(Residential Asset Price Monitoring Survey) கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இது சார்ந்து நாட்டில் உள்ள முக்கியமான 13 நகரங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் உள்ள மக்களின் வீடு வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும், அதற்கேற்ப வீட்டின் மதிப்பு குறிப்பிட்ட நகரங்களில் அதிகமாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி கணிப்பில் தெரிய வந்துள்ளது. வீடுகளை வாங்க முடியாத நகரத்தில் மும்பை முதலிடத்தையும், மலிவான வீடுகளை வாங்கும்(Affordable Housing) பட்டியலில் புவனேஸ்வர் முதலிடத்திலும் உள்ளது.

 

சொல்லப்பட்ட தகவல்கள் வீட்டு வசதி மதிப்பு மற்றும் வருவாய்(Housing price to Monthly income ratio) விகிதத்தில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களின் வருமானம் ஒரு வீட்டினை வாங்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதை காட்டுகிறது. 2015ம் ஆண்டு மார்ச் காலாண்டில் சராசரி வீட்டின் விலைக்கான மாத வருமானம் மும்பை நகரத்தில் 64.1 புள்ளிகளாக இருந்தது. இதுவே கடந்த 2019  மார்ச் காலாண்டில் 74.4 புள்ளிகளாக உள்ளது.

 

இது போல சென்னை நகரத்தில் 2015 மார்ச் காலம் 51.9 புள்ளிகளாக இருந்த சராசரி வீட்டின் விலைக்கான மாத வருமானம் 2019 மார்ச் காலாண்டில் 58.6 புள்ளிகளாக உள்ளது. அனைத்து முக்கிய நகரங்களின் கூட்டு அடிப்படையில் 2015ம் ஆண்டு 56.1 புள்ளிகளாக இருந்த விகிதம், கடந்த 2019 மார்ச் காலாண்டில் 61.5 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

 

மாநில நகரங்களில் கடந்த இரண்டு வருடங்களில் வீட்டு மனை மதிப்பு 2 – 3 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் வீட்டு மனை வளர்ச்சி 4 சதவீதம் மேம்பட்டுள்ளது. வீட்டு மனை துறையில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும், நடுத்தர மக்களின் வருவாய் போதுமான அளவில் உயரவில்லை எனவும், மாத தவணையில் வீடுகளை வாங்குவதிலும் அவர்கள் சிரமப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.

 

கடந்த சில வருடங்களாக நாட்டின் பணவீக்கம் குறைவு மற்றும் வீட்டு மனை விலை(Real Estate) அதிகரிக்காமல் இருப்பதும் மக்களின் வீட்டு மனை வாங்குவதில் சாதகமாக இல்லை. ஒருவர் வீட்டு சொத்தினை வாங்குவதற்கான வருமான வருடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.