முத்ரா திட்டத்தில் 12 கோடி குடிமக்கள் பயனடைந்துள்ளனர் – பிரதமர் மோடி

முத்ரா திட்டத்தில் 12 கோடி குடிமக்கள் பயனடைந்துள்ளனர் – பிரதமர் மோடி

12 Crore Indian citizens benefited from Mudra Yojana

 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY – Pradhan Mantri MUDRA Yojana) திட்டம் 2015 ஏப்ரல் மாதத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்டது. இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் சிறு மற்றும் குறு தொழில், பெரு நிறுவனம் அல்லாத (Non-Corporate) தொழிலுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்குவதாகும். மேலும் புதிய தொழில்முனைவோர் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டமாகவும் இது வழங்கப்பட்டது.

 

இது சம்மந்தமான நிகழ்வில் நேற்று பிரதமர் பேசும் போது, முத்ரா திட்டத்தில் இதுவரை 6 லட்சம் கோடி ரூபாய் கடன், வங்கி மூலம் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் 12 கோடி இந்திய குடிமக்கள்(12 Crore Beneficiaries) பயனடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

கடந்த நிதியாண்டில் மட்டும் முத்ரா திட்டத்திற்காக ரூ.2.53 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டதாக கூறினார். மேலும் அவர் சொன்னதாவது, “ இத்திட்டம் இளம் தொழில்முனைவோரை ஏற்படுத்தவும், தொழிலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் உதவும்.

 

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்று, தொழில் செய்ய ஏதுவாக முத்ரா திட்டம் உள்ளது. 12 கோடி பயனடைந்த மக்களில் 28 சதவீதம் பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்(First Generation Entrepreneurs) என்பது கவனிக்கத்தக்கது.

 

முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்களில் 74 சதவீதம் பேர் பெண்கள்; சுமார் 9 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். 12 கோடி பயனாளிகளில் 55 % மக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் உள்ளோர் “ என்றார்.

( Read this post after the advertisement… )

  

முத்ரா திட்டத்தில் பயன்கள் பல உள்ளதென்றாலும், இன்னும் இத்திட்டம் ஏழை மக்களை சென்றடையவில்லை எனவும், வேலைவாய்ப்பை பெருக்கவில்லை என்ற கருத்தும் இருந்து வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.